சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மாஸ்டர் செஃப் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதால் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா ஆஸ்திரேலியா உள்பட 40 நாடுகளில் இந்த நிகழ்ச்சியை பிரபலமானதை அடுத்து தமிழில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமான செட்களில் கைதேர்ந்த வல்லுநர்கள் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.