தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது இந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் மும்பைகார் , ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் மெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் பேமிலி மேன் இயக்குனர்களின் ஃபார்ஸி ஆகியவற்றில் நடித்து வருகிறார். ஆனால் இந்த படங்கள் எதுவும் இப்போதுவரை ரிலீஸாகவில்லை.