தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவரது நடிப்பில் ரிலீஸாக க/பெ ரணசிங்கம், விஜயுடன் மாஸ்டர் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஸ்ருதிஹாசனுடன் அவர் இணைந்து நடித்துள்ள லாபம் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
சந்தோஷ் சிவன் நீண்ட நாட்கள் கழித்து இயக்கிவரும் இப்படம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய்சேதுபதி சமீகத்தில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் ரிலீஸாகிப் பெரும் வசூல் சாதனை படைத்த உப்பெனா படத்திலும் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்படத்திற்குப் பிறகு நிறைய தெலுங்கு சினிமா வாய்ப்புகள் அவருக்கு நிறைய வருவதால் அவர் தெலுங்கு கற்றுவருவதாகவும் அம்மொழியைக் கற்ற பிறகு அப்படங்களில் நடிப்பதாக அவர் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்