தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர், நடித்த பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதற்கு முன் இப்படத்தின் முதன் சிங்கிலான அரபிக் குத்து பாட்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி பேன் இந்தியா ஹிட் ஆனது.
ரிலீஸுக்குப் பின் அந்த பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி அதுவும் ஹிட்டானது.
இப்பாடல் வெளியாகி , 5 மாதங்களுக்குப் பிறகு யுடியூபில் உலகளவில் நம்பர் 1 இசை வீடியோவாக ட்ரண்ட் ஆனது. இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், சூப்பர் ஹிட் அடித்த பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் 250 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.