விஜய்65 படத்திற்கு ஹீரோயின் ஒப்பந்தம்....ரசிகர்கள் உற்சாகம்
வெள்ளி, 12 மார்ச் 2021 (21:41 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் பொங்கலுக்கு ரிலீஸான படம் மாஸ்டர்.
இப்படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிக்கவுள்ள விஜய் 65 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெறவுள்ளது. இப்படம் வரும் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா, சமந்தா போன்ற நடிகைகள் நடிப்பதாகக் வதந்திகள் பரவிய நிலையில், விஜய் 65 படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பது உறுதியாகியுள்ளது.
இவர் முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கடுத்து விஜய் நடிப்பில் உருவாகவுள்ள விஜய் 66 படத்தை அதே ஆண்டு ஏப்ரலில்வெளியிட் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.