விடுதலை’ படத்தின் வில்லேஜ் செட்: விஜய்சேதுபதி பகிர்ந்த புகைப்படங்கள்!
புதன், 25 மே 2022 (12:57 IST)
விடுதலை படத்தின் வில்லேஜ் செட்: விஜய்சேதுபதி பகிர்ந்த புகைப்படங்கள்!
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படம் விடுதலை. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது
இந்த மலைப் பகுதியில் ஒரு கிராமம் போன்று செட் அமைத்து அதில் படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இந்த படப்பிடிப்பில் சூரி மற்றும் விஜய சேதுபதி இணைந்த காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் சற்று முன் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் விடுதலை படத்திற்காக போடப்பட்டுள்ள வில்லேஜ் செட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் இந்த புகைப் படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இசைஞானி இளையராஜாவின் இசையில் அமைந்துள்ள இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது