வெற்றிமாறனை டீலில் விட்ட விஜய் சேதுபதி… அப்செட் ஆன வெற்றிமாறன்!

சனி, 9 அக்டோபர் 2021 (14:40 IST)
விஜய் சேதுபதி நடித்துவரும் பல படங்களில் வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படமும் ஒன்று.

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படம் விஜய் சேதுபதியின் வருகைக்கு பின்னர் அதற்கான மார்க்கெட் இப்போது அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இதனால் 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகலாம் என சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த படத்தை சீக்கிரம் முடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஏனென்றால் பல படங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி இந்த படத்தை டீலில் விட்டு விட்டாராம். அவரின் கால்ஷீட் கிடைக்காததால் இந்த படம் தாமதமாகிவிடக் கூடிய சூழல் உருவாகியுள்ளதாம். அதனால் அடுத்து அவர் இயக்க வேண்டிய வாடிவாசல் படமும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதால் வெற்றிமாறன் அப்செட் ஆகியுள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்