விரைவில் வெந்து தணிந்தது காடு டீசர்… ரிலீஸ் எப்போது?

சனி, 4 டிசம்பர் 2021 (11:09 IST)
சிம்பு நடிப்பில் உருவாகும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிம்பு தனது திரையுலக வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்ஸில் இருக்கிறார். இதையடுத்து அவர் நடித்துள்ள மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது.. இந்நிலையில் அடுத்து அவர் நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதையடுத்து இந்த படத்தை விரைவில் முடித்து மார்ச் மாதம் திரைக்குக் கொண்டு வர உள்ளார்களாம். மேலும் படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்