1995 ஆம் ஆண்டு வெளியாகி கவனம் பெற்ற திரைப்படம் அசுரன். இந்த படத்தில் இடம்பெற்ற சக்கு சக்கு வத்திக்குச்சி பாட்டு அப்போது பிரபலமான ஒன்றாக அமைந்தது. அந்த பாடலுக்கு மன்சூர் அலிகானின் வித்தியாசமான நடன அசைவுகள் கூடுதல் கவர்ச்சியை தந்தன. இந்த பாடலுக்கு ஆதித்யன் இசையமைத்திருந்தார். இயக்குனர் ஆர் கே செல்வமணி கதை எழுதி, வேலு பிரபாகரன் இயக்கிய இந்த திரைப்படத்தில் அருண் பாண்டியன், நெப்போலியன், ரோஜா மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் அசுரன் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.