வாரிசு படத்தில் விஜய்யின் சூப்பர் ஹிட் பாட்டு ரீமிக்ஸ்? எந்த பாட்டு தெரியுமா?

சனி, 25 ஜூன் 2022 (15:22 IST)
விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தில் ஒரு சூப்பர் ஹிட் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றன. இந்த போஸ்டர்களில் விஜய் மிகவும் ஸ்டைலாகவும் இளமையாகவும் இருப்பதாக ரசிகர்கள் சிலாகித்தனர். இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யின் யூத் படத்தில் இடம்பெற்ற ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலை ரிமாஸ்டர் செய்து பயன்படுத்தியுள்ளார்களாம். இதற்காக இசையமைப்பாளர் தமன் பணிகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்