விஜய்க்கு கதை சொல்லிட்டேன்… R J பாலாஜி பகிர்ந்த ரகசியம்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சனி, 25 ஜூன் 2022 (09:29 IST)
நடிகர் மற்றும் இயக்குனர் R J பாலாஜி இயக்கி நடித்துள்ள ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸாகியுள்ளது.

வீட்டில் கல்யாண வயதில் மகன் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்துக்கு  வீட்ல விஷேசம் என்ற தலைப்பை வைத்துள்ளனர். கடந்த வாரம் ரிலீஸான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

தொடர்ந்து படத்துக்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்படி ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய RJ பாலாஜி “விஜய்யை இயக்குவதற்காக அவருக்கு ஒரு கதை சொல்லியுள்ளேன்” என சீக்ரெட்டைப் பகிர்ந்துள்ளார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்