திருட்டு கதை: முருகதாஸ்க்கு வரலட்சுமி சரத்குமார் ஆதரவு!

திங்கள், 29 அக்டோபர் 2018 (15:10 IST)
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் கதை திருட்டு கதை என புகார் எழுந்துள்ளது. உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் 2007ம் ஆண்டு செங்கோல் என்ற கதையை தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 
அந்த கதையும் சர்கார் கதையும் ஒரே மாதிரி இருப்பதாக எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் அறிக்கை வெளியிட்டார். இதனால் சர்கார் கதை விவகாரம் பரபரப்பு விவாதமாக கிளம்பியுள்ளது. சமூக வலைதளங்களில் முருகதாஸ் கதைகளுக்கு இதுவரை எழுந்த சர்ச்சைகளை குறிப்பிட்டு திருட்டு கதையாக இருக்கலாம் என சிலர் விவாதித்து வருகிறார்கள்.  
 
இந்நிலையில் சர்கார் கதை தன்னுடையதுதான் என வருண் ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சன்பிக்சர்ஸ் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளது.
 
இந்நிலையில் சர்கார் திரைப்படத்தின் கதை விவகாரத்தில்  அப்படத்தில் நடித்த வரலட்சுமி சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். உண்மையே எப்போதும் வெல்லும் என்றும் காலம் அதற்கான விடையை சொல்லும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்