பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தாங்கள் எதற்காக இந்த வீட்டிற்கு வந்தோம் என்பதையே மறந்துவிட்டு ஆளாளுக்கு ஒரு பக்கம் காதல், இன்னொரு பக்கம் அப்பா-மகள் பாசம் என திசை மாறி சென்று கொண்டிருந்தனர். ஆனால் நேற்று வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு கன்னத்தில் அறைந்தால்போல் சில அறிவுரைகளை கூறினார்
குறிப்பாக ஒருதலைக்காதல் என்ற நோயால் வாடிப்போயிருக்கும் அபிராமியை புரட்டிஎடுத்து விட்டார் வனிதா. நீ என்னடா என்னை லவ் பண்றது எனக்கு தேவையே இல்லைன்னு தூக்கி போட்டுட்டு போய்கிட்ட இரு என்று கூறிய வனிதா, அவனுக்கு வெளியே ஒரு லவ் இருக்கு அது தெரியாம நீ அவன் பின்னாடி போய் ஜீரோ ஆகிட்டு இருக்க, அவன் ஹீரோ ஆகிட்டு இருக்கான் என்று வனிதா கூறியது அபிராமியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது