நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டுள்ளது. இதனால் வலிமை படத்தைப் பற்றிய அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் சில காட்சிகள் சென்னையில் படம் பிடிக்கப்பட்ட நிலையில் இப்போது அடுத்த கட்ட ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கே சில முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் ஹெச் வினோத். இந்நிலையில் வெளிநாடுகளில் எடுப்பதாக திட்டமிடப்பட்டு இருந்த காட்சிகளை உள்நாடிலேயே எடுக்கலாமா என தயாரிப்பாளர் யோசிக்க, அந்த காட்சிகளை வெளிநாடுகளில் எடுத்தால்தான் சரியாக இருக்கும் என ஹெச் வினோத் பிடிவாதமாக சொல்லிவிட்டாராம். இதனால் அடுத்தகட்டமாக படக்குழு ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு பறக்கும் என சொல்லப்படுகிறது.