வடசென்னை முன்னோட்டம் வெளியானது!

சனி, 28 ஜூலை 2018 (18:22 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் வடசென்னை படத்தின் முன்னோட்டம் அறிவித்த படி தற்போது வெளியாகியுள்ளது.

 
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன.
 
வடசென்னையை மையப்படுத்திய இந்தக் கதையில் சமுத்திரக்கனி, அமீர், ‘ஆடுகளம்’ கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ்  ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
 
இந்தப் படத்தின் அறிவித்தப்படி தனுஷ் பிறந்தநாளான இன்று வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்