தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா 37 வயதிலும் பலரது கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் கொரோனா உரடங்கில் வீட்டில் இருந்தபடியே தனது பிறந்தநாளை மிகவும் சிம்பிளாக கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், நணபரக்ள் , பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறினார்.
இந்நிலையில் தற்போது தன் ரசிகர்ளுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக கலந்துரையாடிய த்ரிஷாவின் ரசிகர் ஒருவர், " பொன்னியின் செல்வன் படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் என்ன? " என கேட்க அதற்கு ரிப்ளை செய்த த்ரிஷா மௌனமான வாயில் ஜிப் போட்ட இமோஜியை பதிவிட்டு... ஆளவிடுடா சாமி என்றவாறு தப்பித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா குந்தவை ரோலில் நடிப்பதாக செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.