15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நாயகியாக வலம் வருகிறார் த்ரிஷா. ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’, ‘1818’, ‘ஹே ஜூட்’, ‘96’, ‘சாமி ஸ்கொயர்’ என அவர் கையில் அரை டஜன் படங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்டேஜில் இருக்கின்றன.
இந்நிலையில், ‘பரமபதம்’ என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார் த்ரிஷா. திருஞானம் இயக்கும் இந்தப் படம், பெண்களை மையப்படுத்திய கதையைக் கொண்டுள்ளது. இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தில் ஷூட்டிங் தொடங்கலாம் என்கிறார்கள். இந்தப் படத்தில் டாக்டராக நடிக்கிறார் த்ரிஷா.