பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் என்ன தெரியுமா?

வியாழன், 5 டிசம்பர் 2019 (23:00 IST)
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ளது. இந்த படத்திற்கான நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் ஒரு சிலர் இணைந்து உள்ளதாகவும், ஒரு சிலர் விலகி இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இந்தப்படத்தில் சுந்தரசோழர் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த அமிதாப் பச்சன் அவர்கள் இந்த படத்தில் இருந்து விலகி இருப்பதாகவும், அதே போல் பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த சத்யராஜ் விலகி இருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது பெரிய பழுவேட்டரையரின் தற்போது மலையாள நடிகர் லால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது 
 
அதே போல் இந்த கதையில் ஒரு படகோட்டி பெண் கேரக்டர் இருக்கும். ராஜராஜ சோழனையே காப்பாற்றும் இந்த கேரக்டரில் நடிக்க தற்போது திரிஷா ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிகிறது
 
இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் வரும் 15ஆம் தேதி முதல் தாய்லாந்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்