வி.ஐ.பி அமுல் பேபிக்கு அடித்த சூப்பர் லக்! மணிரத்னம் படத்தில் இப்படி ஒரு கேரக்டரா...?

திங்கள், 18 நவம்பர் 2019 (15:05 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் “வேலையில்லா பட்டதாரி”.  சிவில் எஞ்சினீரிங் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் ஒரு சாதாரண குடும்பத்தில் இருக்கும் இளைஞனின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று கலெக்ஷனில் கல்லா கட்டியது.
இந்த படத்தில் தனுஷுக்கு அடுத்ததாக அதிகம் பேசப்பட்டது இப்படத்தின் வில்லன் ரோல் தான். அமிதேஷ் என்ற அந்த நடிகரை படத்தில் அமுல் பேபி என்று தனுஷ் செல்லமாக அழைத்ததே அதன் முக்கிய காரணம் என்று சொல்லலாம். இந்த படத்தில் அவரது யதார்த்தமான நடிப்பு தனுஷ் கேரக்டரை தூக்கி காண்பித்தது. தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது ஒரு ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.


 
இந்நிலையில் தற்போது நடிகர் அமிதேஷ்  மணிரத்னம் இயக்கும் வானம் கொட்டட்டும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. தனா இயக்கி வரும் இப்படத்தில் ராதிகா , சரத்குமார், விக்ரம்பிரபு, மடோனா செபாஸ்டியன் , ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.  மேலும் இப்படம் வருகிற 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்