இந்நிலையில் அமீர் மற்றும் சிபி ஒற்றை காலில் நின்று மணல் மூட்டையை கயிற்றால் இழுத்து பிடித்து நிற்கின்றனர். கொட்டும் மழையில் இந்த டாஸ்க் மிகவும் கஷ்டமான ஒன்றாக ஆடியன்ஸால் உணர முடிகிறது. குறிப்பிட்ட ஒரு அளவிற்கு மேல் மணல் மூட்டை கீழே இறங்கினால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பது நிபந்தனை. இதில் யார் ஜெயித்து டிக்கெட் டூ பைனல் டாஸ்க்கிற்கு முன்னேறுகிறார்கள் என்று பார்க்கலாம்.