நவசுதீன் சித்திக், விஜய் சேதுபதி மெயின் வில்லன்கள். சப்போர்ட் வில்லனாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். கொலையே தொழிலாக கொண்டவர்கள் போல் பல படங்களில் நடித்தவர்கள் பேட்ட படத்தில் வில்லன்களாக வலம் வருகிறார்கள். சிம்ரன் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். த்ரிஷாவுக்கு என்ன ரோல் என்பது தெரியவில்லை. ஒரு வேளை சிம்ரன் கொல்லப்படும் காட்சிகள் இருக்கலாம். ரஜினியின் கூடவே வரும் கதாபாத்திரத்தை சமுத்திரக்கனிக்கு பதில் இந்த படத்தில், சசிக்குமார் ஏற்று நடித்துள்ளார்.
இரத்தக்கறை மிகுந்த படமாக பேட்ட இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹாஸ்டல் வார்டனாக இருக்கும் ரஜினி, எதற்காக விஜய் சேதுபதி கூட்டத்துடன் மோதுகிறார். அதற்கு வலுவான காரணங்கள் என்ன என்பதை டிரெய்லரில் மறைமுகமாக கூட சொல்லவில்லை. விஜய் சேதுபதிக்கு எப்படிப்பட்ட வில்லன் ரோல் என்பதை மறைத்து வைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். படத்தின் முக்கியமான, ரஜினிக்கு நிகரான ரோல் விஜய் சேதுபதிக்குத்தான் என்பது பேட்ட ஆடியோ ரிலீசிலேயே தெரிந்துவிட்டது. எனவே காளியின் ஆட்டத்தையும், விஜய் சேதுபதியின் வேட்டைத்தனத்தையும் பார்க்க ஜனவரி 10 வரை நாம் காத்திருக்க வேண்டும்.
ரஜினி மொத்த டிரெய்லரும் தூக்கி சாப்பிட்டு இருக்கிறார். கேட்டவுடன் மயிற்கூசச் செய்யும் பஞ்ச் வசனங்கள், மிரட்டலான நடிப்பு ரஜினியால் மட்டுமே இது சாத்தியம். மாசு, மரணம், மாசு மரணம், அதுவுக்கு அவந்தா பொறந்துவரணும் என்று அனிருத் பாடிய வரிகள் டிரெய்லரை பார்த்தவுடன் கண்முன்னே வந்து செல்கிறது. ரஜினி ஒருவரால் தான் ஒவ்வொரு முகபாவணையில் ஒரு ஸ்டைலை காட்ட முடியும். சும்மாவா சொன்னாங்க ரஜினியை ஸ்டைல் மன்னன் என்று... 'பார்க்கத்தான போறீங்க இந்த காளியோட ஆட்டத்த, ’சிறப்பான தரமான சம்பவங்களை இனிமேதான் பார்க்கப்போறீங்க' என ரஜினி பேசும் இரண்டு வசனமும் ஏதோ உள் அர்த்தத்துடன் வைக்கப்பட்டுள்ளதா என சந்தேகம் வந்துபோவதை தவிர்க்க முடியவில்லை. இந்த ட்ரெய்லர் 10ஆயிரம் வாலா பட்டாசு மனக்குள் வெடித்தது போன்ற உணர்வை ரஜினி ரசிகர்களுக்கும் நிச்சயம் கொடுத்திருக்கும். சினிமாவில் என்றைக்குமே ரஜினி மரண மாஸ் தான்...