இந்த ஆலோசனை கூட்டத்தில் நடிகர் நாகார்ஜூனா, அல்லு அரவிந்த், இயக்குநர் ராஜமௌலி, தெலுங்கான திரைப்படதுறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் சமூக விலகலுடன் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் ரிலீசுக்கு தயாராக உள்ள படங்களுக்கு முன்னுரிமை, பாதியில் நிற்கும் படங்களுக்கு அனுமதி கொடுப்பது, நிலைமை சீராகும் வரை புதிய படங்களுக்கு அனுமதி தராமல் இருப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. கொரோனா ஊரடங்கில் கிட்டத்ட்ட 40 படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளதாகவும், 60 படங்கள் பாதியில் நிற்பதாகவும் தகவல் வெளியாகிறது.