ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்காக சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் உருவாவதாக சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த படம் பல காரணங்களால் தள்ளிக்கொண்டே சென்றது. இடையில் சிவா அஜித் மற்றும் ரஜினி போன்ற முன்னணி நடிகர்களை இயக்கி கமர்ஷியல் இயக்குனராக பல மடங்கு உயர்ந்துவிட்டார்.