தமிழ் திரையுலகின் முதல் முழுநீள டைம் ட்ராவல் திரைப்படமான 'இன்று நேற்று நாளை' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் ரவிக்குமார் அதையடுத்து இயக்கத்தில் உருவான அயலான் படமும் ஒரு அறிவியல் புனைவுக் கதைதான். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 5 ஆண்டுகளை படக்குழு செலவிட்டுள்ளனர்.
ஆனால் சில காரணங்களால் அந்த படம் தள்ளிவைக்கப்பட்டு சூர்யா, வரிசையாக வேறு படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இப்போது அயலான் வெற்றி பெற்றுள்ள நிலையில் சூர்யா ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை இப்போது தயாரிப்பு நிறுவனமும், இயக்குனர் ரவிகுமாரும் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.