தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவில் முன்னணி குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக இருப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் தற்போது, ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் கேட்பதாகக் கூறப்பட்ட ந்லையில் இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
நான் ஒரே மாதிரியான கேரக்டர் ரோல்களில் நடிக்க விரும்புவதில்லை. ஆனால், நான் நடித்து வெளியான காஞ்சிவரம், இருவர் பொம்மரிலு, ஆகாச மந்தா, மேஜர் ஆகிய படங்களில் ஒரு வாழ்க்கை இருந்தது. நடிப்பு என்பது ஒரு தொழில்தான். ஆனால், கமர்ஷியல் படங்ககளில் நடிக்க அதிகச் சம்பளம் வாங்கிக்கொண்டு எனக்குப் பிடித்த படமாக இருப்பின் குறைந்த சம்பளம் வாங்கிக் கொள்வேன்.