பிறந்த நாளை ஒட்டி இன்று ‘ஜெயிலர்’ பட அப்டேட்: ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி

திங்கள், 12 டிசம்பர் 2022 (07:58 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
ரஜினி பிறந்த நாள் குறித்து டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்
 
இந்த தகவல் அறிந்து ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரம்யா கிருஷ்ணன் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தை  நெல்சன் இயக்கி உள்ளார் என்பதும் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்