இப்போதைக்கு ஆக்ஷன் கதைகள் வேண்டாம் என முடிவு செய்து தனது ஹிட் ரூட்டான காமெடிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அரண்மனை 1, அரண்மனை 2 வரிசையில் இப்போது அரண்மனை 3 எடுப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் ஆர்யா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர். மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.