இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இளைய மகன் ஹாரி. இங்கிலாந்து இளவரசரான இவர் சில வருடங்களுக்கு முன்பு நடிகை மேகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது அரண்மனையிலிருந்தும், அரச பதவிகளிலிருந்தும் வெளியேறி சாதாரண மக்கள் வாழும் வாழ்க்கையை வாழ போவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், தந்தை சார்லஸ் உள்ளிட்டவர்களை கலந்தாலோசிக்காமலே ஹாரி இந்த முடிவை அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாரியின் இந்த முடிவு குறித்து ஆலோசனை செய்ய ராணி எலிசபத்தின் தலைமையில் அரச குடும்பத்தினர் கூட்டம் இன்று கூட உள்ளது.