தனது வெளியேற்றத்துக்கு பின்னர் கமல்ஹாசனிடம் அவர் பேசியபோது மக்கள் அவசரப்பட்டு விட்டார்கள் என்றும் இன்னும் தனக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் என்றும் இந்த நிகழ்ச்சியில் கல்நதுகொள்ள நான் மிகவும் விரும்பி வந்தேன் என்றும் வீட்டில் உள்ளவர்கள் குரூப்பாக சேர்ந்து கொண்டு என்னை நாமினேஷன் செய்து வெளியேறி விட்டதாகவும் தெரிவித்தார்
முன்னதாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது அவருக்கு கொடுக்கப்பட்ட செடி உண்டியலை தூக்கி போட்டு உடைத்து விட்டு கோபத்துடன் சென்றார் என்பதும் அவரை மற்ற போட்டியாளர்கள் கட்டிப்பிடித்து வழியனுப்பிய போதிலும் அர்ச்சனா மற்றும் நிஷா ஆகிய இருவரும் அவரது வெளியேற்றத்தை கண்டு கொள்ளாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது