தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியவர் ஸ்டண்ட் சில்வா. ஜூனியர் என் டி ஆர் நடித்த எமதொங்கா என்ற படத்தின் மூலம் ஸ்டண்ட் இயக்குனராக அறிமுகமானார்.
ஏற்கனவே சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் உருவான சித்திரை செவ்வானம் என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் புதிதாக இயக்கவுள்ள படத்தின் அதிகாரப்பூர்வ விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார். ஏற்கனவே ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இப்போது இன்னொரு ஸ்டண்ட் இயக்குனரும் படமியக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.