இதையடுத்து சென்னையில் குடியேறிய ஸ்ரீ ரெட்டி கோலிவுட்டில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால், லாரன்ஸ் உள்ளிட்ட பலரை பற்றியும் சில பல புகார்களை முன்வைத்தார். இதனைத்தொடர்ந்து சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் குறித்து அதிரடி பதிவை போட்டார்.
ஆனால் இப்போது நான் உதயநிதியை நேரில் பார்த்தௌ கூட இல்லை என தெரிவித்துள்ளார். ஸ்ரீ ரெட்டி கூறியதாவது, உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது இல்லை. உதயநிதியை பற்றி தவறுதலாக போடப்பட்ட பதிவு அது. மேலும் அது எனது பேஸ்புக் பக்கம் இல்லை, போலியானது என தெரிவித்துள்ளார்.