ஓடிடியில் வெளியாகும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம்!

சனி, 20 நவம்பர் 2021 (16:43 IST)
இயக்குனர் வசந்த் சாய் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் உருவாகியுள்ள சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

மூன்று பேர் மூன்று காதல் படத்துக்குப் பிறகு, இயக்குனர் வசந்த் சாய் தற்போது, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். பத்மப்ரியா, கருணாகரன், பார்வதி மற்றும் லஷ்மி பிரியா ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ள இந்த படம் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருது பெற்றுள்ளது. நீண்ட காலமாக திரையரங்க வெளியீட்டுக்காக காத்திருந்த இந்த படம் இப்பொது ஓடிடியில் வெளியாக உள்ளது.

நான்கு எழுத்தாளர்களின் கதைகளை ஒருங்கிணைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் நவம்பர் 26 ஆம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியாக உள்ளது. வசந்த் இயக்கத்தில் நவரசா ஆந்தாலஜியில் வெளியான பாயாசம் படம் கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்