பிரபல பாடலாசிரியருக்கு கேக் ஊட்டிய விஷால்: வைரல் புகைப்படங்கள்!
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (21:04 IST)
பிரபல பாடலாசிரியருக்கு கேக் ஊட்டிய விஷால்
பிரபல பாடலாசிரியர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவர் கேக் வெட்டிய போது அவருக்கு கேக் ஊட்டிய விஷாலின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழில் வெளியான பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதியவர் பாடலாசிரியர் கருணாகரன். இவர் விஷால் நடித்து முடித்துள்ள சக்ரா என்ற திரைப்படத்திற்கும் பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாடலாசிரியர் கருணாகரன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். சக்ரா படக்குழுவினர் அவர் தனது பிறந்த நாளை கொண்டாடியதோடு அவர்கள் முன் பிறந்தநாள் கேக்கையும் வெட்டினார்.
இதனையடுத்து அடுத்து இயக்குனர் எம்.எஸ். ஆனந்தன் மற்றும் நடிகர் விஷால் ஆகிய இருவரும் கருணாகரனுக்கு கேக் ஊட்டினர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
எனது பிறந்தநாளை தனது பிறந்தநாளக கொண்டாடிய மாமனிதர் @VishalKOfficial sir சக்ராவில் எனது வரிகளுக்கு தடம் தந்தார் அவர் இதயத்தில் எனக்கு இடம் தந்தார்