சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சிவராஜ்குமார், ரஜினி அவர்களுடன் நடிக்க யாருக்குதான் பிடிக்காது என்றும் நெல்சன் தன்னிடம் கூறியதாகவும் ஆனால் இந்த படத்தில் நான் நடிக்கிறேனா? இல்லையா? என்பதை அதிகாரபூர்வமாக நெல்சன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் தான் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் என்னிடம் நெல்சன் கதை கூறியது உண்மைதான் என்றும் அந்த கதையை கேட்டு தான் ஆச்சரியம் அடைந்ததாகவும் சிவராஜ்குமார் அந்தப் பேட்டியில் கூறினார் சிவராஜ் குமாரின் தந்தை ராஜ்குமார் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் மிகச்சிறந்த நண்பர்கள் என்பதும் ரஜினியை ராஜ்குமாருக்கு சிறுவயதில் இருந்தே தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.