இதுதான் உங்க சமூக அக்கறையா? – ஜெயிலர் போஸ்டரை விமர்சித்த ப்ளூசட்டை மாறன்!

வெள்ளி, 17 ஜூன் 2022 (12:07 IST)
ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படமான ஜெயிலர் படத்தின் போஸ்டர் வெளியான நிலையில் ப்ளூசட்டை மாறன் அதை விமர்சித்துள்ளார்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் “ஜெயிலர்”. முன்னதாக “தலைவர் 169” என்று அழைக்கப்பட்டு வந்த இந்த படத்தின் டைட்டில் ”ஜெயிலர்” என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போஸ்டரும் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் ரத்தம் வழிய கத்தி ஒன்று தொங்குகிறது.

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. சமீப காலமாகவே ஆக்‌ஷன் ஹீரோக்கள் வன்முறையான படங்களில் நடித்து வருவதாக யூட்யூப் சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் இட்டுள்ள பதிவில் “வன்முறையான முகங்கள், ரத்தம், சிகரெட், போதை பொருட்கள், துப்பாக்கி மற்றும் ரத்தம் சொட்டும் கத்தி போன்றவற்றை காட்டுவதன் மூலம் இந்த நடிகர்கள் 2கே பூமர்களை தவறாக வழிநடத்துகின்றனர். இதுபோல குறைந்தது 100 போஸ்டரையாவது வருங்காலத்தில் நாம் எதிர்பார்க்கலாம். சிறந்த சமூக அக்கறை. முக்கியமாக சூர்யா போன்ற நடிகர்களிடமிருந்து..” என பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்