சிவகார்த்திகேயன் தன்னுடைய 21 ஆவது படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். காஷ்மீரில் இந்த படத்தின் ஷூட்டிங் முதல் கட்டமாக நடந்து முடிந்துள்ளது.
இதற்கிடையே சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. முன்னர் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது மேலும் சில மாதங்கள் தள்ளி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.