தற்போது ரெளடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ள விக்னேஷ் சிவன் ஏற்கனவே கூழாங்கல், நெற்றிக்கண் ஆகிய படங்களை தயாரித்துள்ள நிலையில் தற்போது, வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வி.விநாயக் என்பவர் இயக்கிவருகிறார்.