இந்நிலையில் தனது அடுத்தப்படமான பத்து தல படத்தில் பிஸியாகியுள்ளார் சிம்பு. சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். முதன்முறையாக கௌதம் கார்த்திக், சிம்பு இணையும் படம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை மாலை 6.30 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.