முடிந்தது ‘மாநாடு’ பிரச்சனை: 8 மணிக்கு ரிலீஸ் என தகவல்!

வியாழன், 25 நவம்பர் 2021 (07:19 IST)
சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் திடீரென தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இந்த நிலையில் இந்த படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து விடிய விடிய நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து இன்று இந்த படம் ரிலீஸாவது உறுதி என்றும் கூறப்பட்டது
 
இன்று காலை 5 மணி காட்சி ரத்து செய்யப்பட்டாலும் இன்று காலை 8 மணி முதல் முதல் காட்சியை ரிலீசாகும் என்றும் ‘மாநாடு’ திரைப்படம் இன்று ரிலீஸாவது உறுதி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இது குறித்து சுரேஷ் காமாட்சி சற்றுமுன் தெரிவித்துள்ள ட்வீட்டில் அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்ய விட்டதாகவும் ரிலீஸ் சிறிது காலதாமதம் ஆனதற்கு வருந்துவதாகவும்,  கடவுள் அருளால் இன்று ‘மாநாடு’ படம் ரிலீஸ் ஆகுது உள்ளதாகவும் அறிவித்துள்ளார்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்