கமல்ஹாசன் சரிகா தம்பதியினரின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், அமெரிக்கா சென்று இசை சம்மந்தமாக படித்து வந்தார். கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் படத்துக்கு இசையமைத்த அவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இந்தியில் இஷ்க் படத்தில் நடித்த அவரை ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழுக்குக் கொண்டுவந்தார் ஏ ஆர் முருகதாஸ்.
இந்நிலையில் இப்போது ஒரு நடிகையாக 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஸ்ருதிஹாசன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “15 ஆண்டுகளைக் கடந்துள்ளேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அதற்காக நான் எப்போதும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். நான் வளர்ந்த மாய உலகில், நடிகராக இருப்பது பாக்கியம். ரசிகர்களின் துணையின்றி நான் இந்த இடத்துக்கு வந்திருக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.