நடிகர் கமலஹாசன் அவர்களுக்கு கொரனோ பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். சுவாச குறைவு, காய்ச்சல் மற்றும் தொற்று நோய் இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளித்து அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது.