சந்தானத்த நம்பி காசு போடலாம்… மன்னவன் வந்தானடி மீண்டும் தொடக்கம்?

செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (16:17 IST)
செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்த மன்னவன் வந்தானடி திரைப்படம் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்க ஆரம்பிக்கப்பட்ட படம் மன்னவன் வந்தானடி மிகவும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. காதல் படமாக தயாரான இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் அமெரிக்காவில் நடந்தது. ஆனால் பைனான்ஸ் பிரச்சனைக் காரணமாக பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அந்த பட்ம் தூசு தட்டபட உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தையை சந்தானத்தின் படங்கள் சிறப்பான வரவேற்பைப் பெறுவதால் வேறொரு தயாரிப்பாளர் அந்த படத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்