ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எப்படி உருவாக்குகிறேன் – இயக்குனர் செல்வராகவன் விளக்கம்!

வெள்ளி, 8 ஜனவரி 2021 (16:30 IST)
இயக்குனர் செல்வராகவன் தான் உருவாக்கும் கதாபாத்திரங்களுக்காக எவ்வளவு மெனக்கெடுகிறேன் என்பது குறித்து பேசியுள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் உருவாக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும்  மயக்கம் என்ன ஆகிய படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. மயக்கம் என்ன திரைப்படத்துக்குப் பிறகு இப்போது செல்வராகவன் தனுஷை ஒரு படத்தில் இயக்க உள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய கதாபாத்திரங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகிறார்கள் என்பது குறித்து செல்வராகவன் பேசியுள்ளார். அதில் ‘ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க பயிற்சியும் முயற்சியும் தேவை.  அதற்காக திரும்பத் திரும்ப ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதினேன். நான் உருவாக்கிய கதாபாத்திரங்களாகவே மாற வேண்டி இருந்தது ‘ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்