செல்வராகவன் பீஸ்ட் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கவில்லை என்றும் ஆனால் இந்த படத்தின் கதையின் திருப்புமுனை உதவும் ஒரு கேரக்டரில் நடித்து வருவதாகவும் குறிப்பாக விஜய் ஒரு பெரிய பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்யும் போது அவருக்கு உதவியாக ஆலோசனை சொல்லும் ஒரு அதிகாரியாக செல்வராகவன் நடித்து இருக்கிறார் என்றும் அவரது கேரக்டர் இந்த படத்தின் மிக முக்கிய கேரக்டர் என்றும் கூறப்பட்டு வருகிறது
விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.