ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. அந்த படத்தின் வெற்றியால் வரிசையாக தோல்விப் படங்களாகக் கொடுத்த ஆர்யாவின் மார்க்கெட் ஏறியது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் இப்போது பா ரஞ்சித் தங்கலான் படத்தை முடித்த பின்னர் சார்பட்டா 2 திரைப்படத்தை தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு 90 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சார்பட்டா பரம்பரை படத்தின் மிகப்பெரிய வெற்றி காரணமாக இரண்டாம் பாகத்துக்கு இவ்வளவு மிகப்பெரிய பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.