இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைவரும் வீட்டில் இருந்துவரும் நேரத்தில் சாண்டி குழந்தையாக தோன்றி கவின், முகென், தர்ஷனிடம் வீட்டில் போர் அடிக்கிறது என கூறி விளையாட கூப்பிடுகிறார்.
இந்த வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் போதே அவரது மகள் லாலா, அப்பாவின் குறும்புத்தனத்தை பார்த்து நக்கலாக சிரிக்கிறார். செம காமெடியாக இருக்கும் இந்த வீடியோவை சாண்டி இன்ஸ்டாவில் வெளியிட இதை எந்த ஆப்பில் உருவாக்கினீர்கள் என்று இணையவாசிகள் கேட்டு வருகின்றனர். இதற்குமுன்னர் இதே போன்று விக்னேஷ் - நயன்தாரா இணைந்து குழந்தையாக விளையாடிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.