உங்களுக்கு ஒரு பெரிய சல்யூட்... வானில் பறந்து பிரம்மிப்பூட்டும் சம்யுக்தா ஹெக்டே

புதன், 2 செப்டம்பர் 2020 (17:13 IST)
ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

இந்நிலையில் சமீபநாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, டான்ஸ் வீடியோ, யோகா வீடியோ என தொடர்ந்து தனது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். இந்நிலையில் தற்ப்போது உயரத்தில் பறந்து  Hula hoop சுற்றிய போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். அவரது திறமையை கண்டு பலரும் வியந்துள்ளனர். இயக்குனர்கள் யாரேனும் சர்க்கஸ் பற்றிய படம் எடுக்க நினைத்தால் எதையும் யோசிக்காமல் ஸ்ட்ரைட்டா சம்யுக்தா வீட்டுக்கு கிளப்பி போயிடுங்க...
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Just switched on "Airplane mode" ✈ . . . PS: the number of people who sent me a screenshot of this from the video i posted in my story were too damn high, so dedicating this to the ones who sent this to me first @madhur_miskin @____k_s_p_s____ @anusaanvi8

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்