வாயை விட்டு மாட்டிக்கொண்ட சல்மான்கான் - வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

வியாழன், 8 ஜூன் 2017 (11:31 IST)
இருசக்கர வாகனத்தில் சாலையில் செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும் என அறிவுரை கூறிய நடிகர் சல்மான்கானை, சமூகவலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.


 

 
உலக சுற்றுச்சூழல் தினமான கடந்த ஜூன் 5ம் தேதி, சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி பேசிய சல்மான் கான் “இருசக்கர வாகனங்களை ஒட்டும்போது மெதுவாக செல்லுங்கள். சிக்னலை மதியுங்கள்.. மக்கள் செல்லும் சாலை ரேஸ் விடும் பாதை கிடையாது. நீங்கள் வேகமாக சென்று விபத்து ஏற்பட்டால் நீங்கள் மட்டுமில்லாமல், மற்றவர்களுக்கும் சிரமம்” என அறிவுரை பொழிந்தார். அவ்வளவுதான் சமூகவலைத்தளங்களில் பொங்கி எழுந்தனர் நெட்டிசன்கள்..
 
மானை வேட்டையாடி கொன்ற வழக்கு மற்றும் குடித்து விட்டு காரில் வேகமாக சென்று சாலையோரத்தில் படுத்திருந்தவரை கொன்ற வழக்கில் சிக்கிய சல்மான்கானுக்கு அறிவுரை சொல்ல தகுதியில்லை என கடுமையாக விமர்சித்தனர்.
 
அதேபோல் “உலக அமைதியை பற்றி ஹிட்லர் பேசுவது போல் இருக்கிறது எனவும், வனவிலங்கு பாதுகாப்பு குறித்து சல்மான்கான் அறிவுரை கூறுவதுபோல் இருக்கிறது அவரின் சாலைப் பாதுகாப்பு விழிப்பு உணர்வு எனவும், வங்கிகளுக்கு சரியான நேரத்தில் கடனை திருப்பி செலுத்துவது பற்றி விஜய்மல்லையா அறிவுரை கூறுவது போல் இருக்கிறது” என பலரும் கிண்டலடிக்க தொடங்கிவிட்டனர்.
 
வீணாக வாயை விட்டு இப்படி மாட்டிக்கொண்டாரே சல்மான்கான் என பாலிவுட்காரர்கள் கிண்டலடிக்கின்றனராம். 

வெப்துனியாவைப் படிக்கவும்