இந்நிலையில் இப்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவழகன் மீண்டும் ஆதி நடிக்கும் சப்தம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படமும் ஒரு பேய் த்ரில்லர் படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கு சப்தம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆதியுடன் சிம்ரன் மற்றும் லைலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. வித்தியாசமான தாங்கமுடியாத சத்தங்களால் பாதிக்கப்படும் நபர்களைக் காப்பாற்ற ஆடியோ இஞ்சினியர் ஆதி போராடுவதும் அதில் கண்டடையும் திடுக்கிடும் முடிவுகளே இந்த படத்தின் கதையாக இருக்கும் என்பதை டிரைலர் காட்டுகிறது. ஈரம் படத்துக்குப் பின்னர் மீண்டும் வித்தியாசமான பேய்க் கதையில் இறங்கியுள்ளார் அறிவழகன். விஷ்வல்கள் மிரட்டலாக இருந்தாலும் பல இடங்களில் கிராஃபிக்ஸ்தான் படுமோசமாக இருக்கிறது.