ஓவியா வீட்டில் ரெய்டு நடந்ததா… சமூகவலைதளங்களில் பரவும் தகவல்!

சனி, 8 மே 2021 (15:14 IST)
நடிகை ஓவியா வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததாக சமூகவலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கியதே வீட்டுக்குள் இருந்த ஓவியா மற்றும் ஆரவ் ஆகியோரின் காதல்தான். ஆனால் ஒரு கட்டத்தில் ஓவியாவை ஆரவ் விலக்க மன அழுத்தத்துக்கு ஆளான ஓவியா பாதியிலேயே அந்த வீட்டில் இருந்து வெளியேறினார். அதற்கு முன்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் ஓவியாவை பிரபலமாக்கியதே பிக்பாஸ்தான். ஆனால் அந்த பிரபலத்தின் மூலம் அவருக்கு பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அவர் மோடியை கேலி செய்யும் விதமாக ஒரு டிவிட்டை பகிர்ந்திருந்தார். அதையடுத்து இப்போது சில நாட்களுக்கு முன்னர் ஓவியா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இதை ஓவியா முற்றிலுமாக மறுத்துள்ளாராம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்